சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
தர்மபுரி,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாநில நிர்வாகி அசோகன், மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் மற்றும் நிர்வாகிகள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் சாயத்தொழிற்சாலை மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுகள், நகராட்சிகளின் கழிவுகள், மருத்துவ கழிவுகள் நீர்நிலைகள், குளங்கள் குட்டைகளில் கடந்த பல ஆண்டுகளாக கலக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசு படுகிறது. இந்த நீரை குடிப்பதால் வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் புற்றுநோய், தோல் நோய்கள் ஏற்படுகின்றன. ஆண்கள், பெண்களுக்கு மலட்டுதன்மையும் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டும் இதுவரை உரிய தீர்வு காணப்படவில்லை.
தர்மபுரி மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் செயல்பட்டபோதும் சுற்றுச்சுழல் மாசுபடுவதை தடுக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதில் தொடர்ந்து தாமதப்படுத்தினால் பாதிப்புகள் மேலும் அதிகமாகும். எனவே சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதை உடனடியாக தடுக்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் கழிவுநீரை சுத்திகரிக்காத தொழிற்சாலைகளை இயங்கவிடாமல் செய்ய துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களை சுற்றுச்சூழல் மாசுபாட்டின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.