சூறைக்காற்றுடன் கனமழை மரங்கள் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிப்பு
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.;
கடத்தூர்,
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தன. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.இந்தநிலையில் நேற்று காலை மின்வாரியம் சார்பில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் சாலைகள், தெருக்களில் முறிந்து விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படுத்தப்பட்டன.