குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

சேசுராஜபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2018-05-22 22:30 GMT
தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை தாலுகா நாட்ராம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சேசுராஜபுரம். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வினியோகிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதிக்குள்ளானார்கள்.

இதை கண்டித்து அஞ்செட்டி சாலையில் காலிக்குடங்களுடன் நேற்று காலை சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆண்களும், பெண்களும் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் தளி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணி அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்