காட்டுமன்னார்கோவில் அருகே தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை

காட்டுமன்னார்கோவில் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-05-22 22:45 GMT
காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் பட்டிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 48), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கியபடி உயிருக்கு போராடினார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலகிருஷ்ணன் நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி லலிதா காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்