முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பேராம்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஆவூர்,
புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே உள்ள பேராம்பூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் வைகாசி திருவிழாவானது கடந்த 6-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூசாரியார் அம்மன் கரகம் எடுத்து கோவிலை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதைத்தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வாக பொதுமக்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
கிடா வெட்டு பூஜை
விழாவையொட்டி நேற்று முன்தினம் கல்லூரணியில் இருந்து பக்தர்கள் பால்குடம், திருமஞ்சனம் அக்னிசட்டி பறவைகாவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மேலும் திரளான பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பெண்கள் தங்களது குழந்தைகள் நோய் நொடியின்றி நல முடன் இருக்க கரும்பு தொட்டிலில் குழந்தைகளை படுக்கவைத்து கோவிலை சுற்றிவந்து மாவிளக்கு பூஜை போட்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மதியம் கோவில் முன்பு கிடாவெட்டு பூஜை நடைபெற்றது. இதையடுத்து மாலை படுகளம் நிகழ்ச்சியும், இரவு புராண நாடகமும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை காப்பு அவிழ்க்கப்பட்டு மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் பேராம்பூர் சாத்திவயல் கல்லுப்பட்டி உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.