அனுமதியின்றி 4 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் பயணம்: எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
சீர்காழியில் அனுமதியின்றி 4 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் பயணம் செய்ததால் எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழியில் பா.ஜனதா கட்சி சார்பில் விவசாயிகளின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று முன்தினம் மாலை சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் காரில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து 4 குதிரைகள் பூட்டப்பட்ட பிரம்மாண்ட சாரட் வண்டியில் எச்.ராஜா, தஞ்சை கோட்ட பொறுப்பாளர் தங்க வரதராஜன் ஆகியோரை அமர வைத்து மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் அகோரம் முன் அமர்ந்து வண்டியை ஓட்டி கொண்டு கச்சேரி ரோடு வழியாக பொதுக்கூட்டம் நடைபெற்ற பழைய பஸ் நிலையம் வரை 100-க்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக சென்றனர்.
இந்நிலையில் சீர்காழியில் அனுமதியும் இன்றி சாரட் வண்டியில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றதாகவும், பொதுக்கூட்டத்தில் ஒலி பெருக்கி மூலம் கொலைமிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும், மற்ற மதத்தை இழிவாக பேசியதாகவும், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் அகோரம், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தஞ்சை கோட்ட பொறுப்பாளர் தங்க வரதராஜன் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைப்போல போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு அளித்த புகாரின் பேரில் நேற்று சூரக்காடு மேம்பாலம் அருகே அனுமதியின்றி சைக்கிள் பேரணியாக சென்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் அகோரம், மும்மூர்த்தி, குருமூர்த்தி, கருப்பு முருகானந்தம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.