ஒன்றுபடு தமிழகமே...!
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று மகாகவி பாரதியார் பாடினார்.
இன்றைய செந்தமிழ்நாட்டை அப்படிப் பாடினால் நாக்கு சுளுக்கிக் கொள்ளுமோ என்று அச்சமாக இருக்கிறது.
வைகையும் காவிரியும் வறண்டு கிடக்கின்றன. நதியின் உள்ளாடை மணல். அதுவும் களவாடப்படுகிறது. ஏரிகளும், குளங்களும் ஆக்கிரமிப்புகளால் அவதிப்படுகின்றன.
தமிழகத்தின் சுவாசம் விவசாயம். அது மூச்சுத் திணறலால் முடங்கிக் கிடக்கிறது. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றார் வள்ளலார். இன்று பயிர் மட்டும் வாடவில்லை. விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கனமழை பெய்யும் காலங்களில் எவ்வளவோ தண்ணீர் கடலில் வீணாகக் கலப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மழை நீர் வந்து மடி நிரப்பும் குளங்களையும், ஏரிகளையும் நாம் பாதுகாக்கத் தவறிவிட்டோம். இந்த அவலங்களுக்கெல்லாம் காரணம், அண்டை மாநிலத்தவரோ, அந்நிய தேசத்தவரோ இல்லை. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பதைப்போல் நம்மால்தான் நாடு சிதனப்பட்டுக்கிடக்கிறது.
இந்த வேதனைகளுக்கெல்லாம் நமது மெத்தனமும் காரணம். இதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நீ தான் காரணம்... நீயேதான் காரணம் என்று ஒருவருக்கொருவர் வசைபாடாமல், நாம் விழித்துக் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது.
‘நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’ என்ற கண்ணதாசனை நினைவுகூர்ந்து எதிர்கால நம் சந்ததியினர் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ வழிவகை செய்யவேண்டும். ‘ஒத்தக் கரும்பை ஒடித்து விடலாம் கட்டுக் கரும்பை ஒடிக்க முடியாது’ என்று பாலபாடத்தில் படித்த நாம் தமிழகத்திற்கு நாங்களே காவலர்கள் என்று முழங்குகிறோம் தனித்தனியாக.
எனவே, நாட்டை நேசிக்கும் தலைவர்களே! தமிழகத்தை திருப்பணி செய்ய அனைவரும் ஒன்று சேருங்கள். லட்சக்கணக்கான தொண்டர்களை செயலில் இறங்கச் செய்யுங்கள். அதேபோல் லட்சக்கணக்கான ரசிகர்களை குவித்திருக்கும் பெரிய நடிகர்களே உங்கள் ரசிகர்களை செந்தமிழ்நாட்டின் உந்து சக்தியாக செயல்பட வழிகாட்டுங்கள்.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பத்தாயிரத்துக்கும் மேலான குளங்கள் ஏரிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அனைவரும் ஒன்று கூடி, அனைத்தையும் தூர்வாரி ஆழப்படுத்தினால், பூமிக்குள் சேமிக்கும் மழைநீர் நமது பயிருக்கும் உயிருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
அவை போக விளையா நிலங்களில் புதுப்புது குளங்கள், ஏரிகளைப் படைத்து விவசாய நிலமாக மாற்ற வேண்டும். ஏட்டுச் சுரைக்காய் பசி ஆற்றாது. நாம் கூட்டுச் சுரைக்காயாக மாற வேண்டும். இனிமேல் நமக்கு செயல் செயல் செயல் மட்டுமே.
நாட்டு நலனில் அக்கறையுள்ள இளைஞர்கள், மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒன்று சேர்ப்போம். மாவீரன் நெப்போலியன் சொன்னார், ‘உனது இடது காலை முன்னே வை. வலது கால் தானே வரும்’ என்று. நாம் இடது காலாகச் செயல்படுவோம். வலது காலாக அரசாங்கமும் இணைந்து கொள்ளும். அனைத்துப் பணிகளையும் ஒரு அர்ப்பணிப்போடு செய்தால் ஆலயத்திருப்பணிபோல், தமிழகத் திருப் பணியும் தலை நிமிர்ந்து ஒளிரும்.
நமது தமிழகத் தலைவர்கள், தமிழர்கள் மீதும் தாய்மொழி மீதும் மிகவும் பற்றுக் கொண்டவர்கள்.
தனிமரம் தோப்பாகாது. உருவிற் பெருமரம் காடாகாது என்பதை உணர்ந்தவர்கள். வேகம், விவேகம் நிறைந்த தமிழகத் தலைவர்களே ஒன்று கூடுங்கள். தொண்டர்களை ஊக்கப்படுத்தி ஆக்க வேலைகளில் செயல்படச் செய்யுங்கள்.
ஒற்றுமையின் வலிமையை உணர்ந்தவர்கள் நாம். பிரிந்து கிடந்து சரிந்து விழாமல் ஒன்றுபட்டு தமிழகத்தை உயர்த்த வேண்டும். வருகின்ற காலங்களில் ஒற்றுமைதான் நம்மை வாழ வைக்கும்.
தயக்கம் தடைக்கல். அந்த தடைக்கல்லை உடைத்தெறிவோம். நல்ல காரியத்தை தள்ளிப்போடாமல் உடனே செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
தலைவர்கள் நினைத்தால் தமிழகம் உயரும். தொண்டர்கள் உழைத்தால் அனைத்து நலங்களும் நம்மை வந்து சேரும். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற ஒற்றுமை மந்திரத்தை மனதில் ஓதி ஒன்றுபடுவோம். வாழ்க தமிழகம்... வளர்க தமிழ்!
- கவிஞர் காமகோடியன்