வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்!

ராணுவ பாதுகாப்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சி கழக நிறுவனம் சுருக்கமாக டி.ஆர்.டி.ஓ. எனப்படுகிறது.

Update: 2018-05-22 05:11 GMT
ராணுவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் பணி :

ராணுவ பாதுகாப்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சி கழக நிறுவனம் சுருக்கமாக டி.ஆர்.டி.ஓ. எனப்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையம் (ஆர்.எ.சி.) நிறுவனத்தில் தற்போது சயின்டிஸ்ட் - பி, பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 41 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் 1-6-2018-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் , மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 1-6-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை rac.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

சுற்றுலாத்துறையில் வேலை


தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிறுவனத்தில் தோட்டக்காரர், காவலர் போன்ற பணியிடங்கள் நிரப்பப் படுகிறது. மொத்தம் 23 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தோட்ட பராமரிப்பாளர் பணிக்கு 13 இடங்களும், வாட்ச்மேன் பணிக்கு 10 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 1-7-2017-ந் தேதி 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் சுற்றுலா ஆணையர், சுற்றுலா ஆணையரகம், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை, சென்னை 600002 என்ற முகவரியை 28-5-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். மாதிரி விண்ணப்ப படிவம் www.tamilnadutourism.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விரிவான விவரங்களையும் அதில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்