நிரவ் மோடியின் ரூ.170 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
நிரவ் மோடியின் ரூ.170 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மும்பை,
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி வரையில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பி விட்டார். அவர் மீது அமலாக்க துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நிரவ் மோடியின் அசையும், அசையா சொத்துக்கள், வங்கிக்கணக்குகள், பங்குச்சந்தை முதலீடுகள் என அனைத்தையும் முடக்கி வருகின்றனர்.
தற்போது நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுவரையில் ரூ.7 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.