பரமக்குடியில், முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை
பரமக்குடியில் முன்னாள் அமைச்சர் உறவினர் வீட்டில் தனியாக இருந்த பெண் டாக்டரை கட்டிப்போட்டு தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூவேந்தர் நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர்கள் டாக்டர் தம்பதியினர் பாலச்சந்திரன், கிருஷ்ணவேணி. இருவரும் அரசு டாக்டர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் சந்தைக்கடை தெரு அருகில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் பாலச்சந்திரன் சென்னையில் இருக்கும் அவருடைய மகனை பார்க்க சென்றுவிட்டார். டாக்டர் கிருஷ்ணவேணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதைஅறிந்த கொள்ளையர்கள் நேற்று அதிகாலை 3 மணிக்கு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்துள்ளனர். பின்னர் படுக்கை அறையில் தனியாக படுத்திருந்த டாக்டர் கிருஷ்ணவேணியின் அறைக்குள் சென்றுள்ளனர். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த டாக்டர் கிருஷ்ணவேணியின் கையில் அணிந்திருந்த தங்க வளையல்களை கொள்ளையர்கள் கழற்றிஉள்ளனர். மேலும் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி, மற்றும் நகைகளை கழற்ற முயன்றபோது கிருஷ்ணவேணி திடுக்கிட்டு கண் விழித்து பார்த்துள்ளார். அப்போது அவரை சுற்றி கொள்ளையர்கள் 4 பேர் முகமூடி அணிந்தபடி நின்றுள்ளனர்.
அவர்களை கண்டதும் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி செய்வதறியாமல் திகைத்து கூச்சலிட முயன்றுள்ளார். உடனே அந்த முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி சத்தம் போட்டால் குத்திக்கொன்று விடுவோம் என்றும், நீயாக நகை, பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டால் உன்னை உயிரோடு விட்டுவிடுவோம் என்று மிரட்டிஉள்ளனர்.
இதனால் பயந்து போன கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி, காதில் அணிந்திருந்த வைரத்தோடு ஆகியவற்றை கழற்றி கொடுத்துள்ளார். அதைப்பெற்றுக்கொண்ட அவர்கள் ஒரு கயிற்றில் கிருஷ்ணவேணியை கைகளை கட்டிப்போட்டு போர்வையில் அவரை மூடிப்போட்டுவிட்டு பீரோ சாவியை வாங்கி திறந்து அதில் இருந்த தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
இதில் தங்க நகைகள் மட்டும் 40 பவுன் ஆகும். பின்னர் கொள்ளையர்கள் தப்பிச்செல்வதற்காக கிருஷ்ணவேணியின் காரை எடுக்க முயற்சித்துஉள்ளனர். ஆனால் முடியாததால் சாவியை தூக்கி எறிந்துவிட்டு முன்பக்க கதவு வழியாக வந்து தெருவை கடந்து பின்பக்கமாக உள்ள ஆற்றின் வழியாக தப்பிஓடிவிட்டனர். அப்போது வீட்டில் இருந்த சென்ட், வாசனை திரவியங்களை வழிநெடுக தெளித்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கிருஷ்ணவேணி கையில் கட்டப்பட்டிருந்த கயிறை தானாகவே அவிழ்த்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்துள்ளார். கொள்ளையர்கள் தப்பிவிட்டதை அறிந்த அவர் பக்கத்து வீட்டின் கதவை தட்டி அவர்களை அழைத்து விவரத்தை தெரிவித்துள்ளார். பிறகு இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி நேரில் வந்து கிருஷ்ணவேணியிடம் விசாரணை நடத்தினார். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அப்போது மோப்பநாய் வைகை ஆற்றுப்பகுதிக்குள் ஓடி நின்றது. அங்கு சென்ற போலீசார் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கொள்ளை சம்பவம் நடந்த டாக்டர்கள் பாலச்சந்திரன், கிருஷ்ணவேணி இருவரும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜனின் உறவினர்கள் ஆவார்கள். பரமக்குடியில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணவேணி கூறியதாவது:- நேற்று முன்தினம் இரவு டி.வி. பார்த்துவிட்டு 12 மணிக்கு மேல் தான் தூங்கச்சென்றேன். நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது ஏதோ நடப்பது போல் தோன்றியது. திடீரென கண் விழித்து பார்த்தபோது என்னை சுற்றிலும் கொள்ளையர்கள் 4 பேர் முகமூடி அணிந்தபடி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் திருடர்கள் என்பதை புரிந்து கொண்ட நான், என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று கூறினேன். உடனே அவர்கள் கத்தியை காட்டி சத்தம் போட்டால் குத்திக்கொன்று விடுவோம் என்று மிரட்டினர். பின்பு கயிற்றால் என்னை கட்டிப்போட்டு விட்டு என் மீது போர்வையை போர்த்தி நகை, பணத்தை எடுத்துச்சென்று விட்டனர். காதில் கிடந்த வைரத்தோடுகளை பார்த்ததும் கத்தியால் காதை அறுக்க வந்தனர்.
அப்போது நானே கழற்றித்தருகிறேன் என்று கூறி உயிரை காப்பாற்ற வேறு வழியின்றி நானே செய்ய வேண்டியதாயிற்று என்று கண்ணீர் விட்டு அழுதார். மேலும் காரை எடுக்க முடியாததால் அதனை விட்டுச்சென்று விட்டனர். அதிகாலை 3 மணி முதல் 3.40 மணி வரை வீட்டுக்குள் கொள்ளையர்கள் இருந்தனர். அதன் பிறகு தான் நான் வெளியில் சென்று பக்கத்து வீட்டின் கதவை தட்டி அவர்களை எழுப்பி விவரத்தை கூறினேன். எனது 2 செல்போனையும் அவர்கள் எடுத்துச்சென்று விட்டனர். நான் உயிர் தப்பியதே இறைவன் செயல் தான். இவ்வாறு அவர் கூறினார்.