கூடங்குளம் அணு உலை கழிவுகளை விரைவாக அப்புறப்படுத்த வேண்டும் கலெக்டரிடம் மனு
கூடங்குளம் அணு உலை கழிவுகளை விரைவாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியினர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்,
வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.
அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில், நிர்வாகிகள் மணவை கண்ணன், சுசீலா உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அணு உலைகள் ஆபத்தானவை. அது அனைவரையும் பாதிக்கும் தன்மையானது. இயற்கை சீற்றம் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே தாக்கும், அழிக்கும். அணு உலை கதிர்வீச்சு இடைவிடாது அழிக்கும் ஆற்றல் மிகுந்தது. ஜெர்மனியில் மக்களுக்கு ஆபத்து இல்லாத சூரிய மின்சாரம் தயாரித்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்திவிட்டு எஞ்சியதை பிற நாடுகளுக்கும் வழங்குகிறது. ஆனால் இந்தியாவில் ஆட்சியாளர்கள் கமிஷன் திட்டங்களால் சூரியனை விட்டு, மக்களை அழிக்கும் ஆபத்து நிறைந்த கூடங்குளம் அணு உலை திட்டங்களை அபிவிருத்தி செய்கிறார்கள்.
அணு கழிவு கதிரியக்கத்தால் மக்கள் மடிவதற்கு முன், கூடங்குளம் இருப்பது நெல்லை மாவட்டம் என்று பார்க்காமல், தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, கூடங்குளம் அணு உலை கழிவுகளை விரைவாக அங்கிருந்து அப்புறப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அஞ்சுகிராமம் அருகே வாரியூர் பக்கம் உள்ள லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலெக்டரிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு சொந்தமாக வீடோ, நிலமோ இல்லை. பால்குளம் ஊரில் உள்ள செயல்படாத உப்பளத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி வழங்கப்படுவதாக தெரிய வருகிறது. எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லாத காரணத்தால் சம்பந்தப்பட்ட இடத்தில் எங்களுக்கு வீடு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பச்சைத்தமிழகம் கட்சியின் குமரி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் பலர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் “கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதைப்போன்று, நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் கலெக்டர் தலைமையில் தொழிலாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
அழகியபாண்டியபுரம் அருகே உள்ள எட்டாமடை பகுதியைச் சேர்ந்த லலிதாபாய் (வயது 39) என்பவரை கொலை செய்தவர்களையும், அவருடைய கணவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவத்துக்கு காரணமானவர்களையும் தனிப்படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரி ஏற்கனவே இரண்டு முறை லலிதாபாய் தாயார் வசந்தா, பேரன்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். 3-வது முறையாக நேற்றும் அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.