வயலப்பாடி கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
வயலப்பாடி கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்காக 1985-ம் ஆண்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில் சுமார் 6.40 ஏக்கர் நிலம் கையகப் படுத்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், சுமார் 4.41 ஏக்கர் நிலத்தை எதிர்த்து நில உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை வாங்கினர். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் மேற்படி 4.41 ஏக்கர் நிலத்திற்கான தடையாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மீதம் உள்ள 1.99 ஏக்கர் நில உரிமையாளர்கள் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று வயலப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வீர.செங்கோலன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியர் காமாட்சி, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை அடுத்து இன்னும் 1 வாரத்தில் மேற்படி நிலத்தை அளவீடு செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அனைவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.