பெட்டவாய்த்தலை அருகே கார்கள் மோதல்; பெண் பலி 7 பேர் படுகாயம்
பெட்டவாய்த்தலை அருகே கார்கள் மோதிய விபத்தில் பெண் பலியானார். 7 பேர்படுகாயம் அடைந்தனர்.;
ஜீயபுரம்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 50). இவர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு, மீண்டும் காரில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
காரை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பிரபு (35) என்பவர் ஓட்டி வந்தார். கார் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்தின் அருகில் நள்ளிரவில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதியது.
இந்த விபத்தில் காருக்குள் இருந்த ஜெயராமன், அவரது மனைவி மணி (44), உறவினர்களான பார்த்தீபன் (30), அவரது மனைவி பானுமதி (23), ஹாசினி (5), ஹரிஷ் (2), மகேந்திரன், டிரைவர் பிரபு ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பெட்டவாய்த்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருச்சி மற்றும் குளித்தலை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் சாவு
இதில் பார்த்தீபன், பானுமதி ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு பானுமதி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். ஜெயராமன் உள்பட 7 பேருக்கு திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர், காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்து குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.