ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று போராட்டம்: 2 ஆயிரம் போலீசார் குவிப்பு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடைபெற உள்ளதையொட்டி பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 99-வது நாளாக போராட்டம் நடத்தினர். இன்று (செவ்வாய்க்கிழமை) 100-வது நாள் போராட்டம் நடக்கிறது.
இதையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் போராட்டக்குழுவினர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. அதற்கு பதிலாக எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திட்டமிட்டபடி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2 இடங்களில் போராட்டம் நடைபெறும் சூழல் ஏற்பட்டு உள்ளதால் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.
இந்த போராட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை அருகே போராட்டக்காரர்கள் செல்லாத வகையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 15 இடங்களில் தற்காலிக வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து போராட்டத்துக்கு வருகிறார்களா? என்று முழுமையாக கண்காணிக்கப்படுகின்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களை அடைத்து வைப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களையும் போலீசார் தயார் நிலையில் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதும் சுமார் 70 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று போராட்டத்தில் தீவிரம் காட்டி வருபவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 107 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று மாலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீளவிட்டான் பகுதியில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மக்கள் திரண்டு வந்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.