மதுகுடித்ததை தட்டிக்கேட்ட தொழிலாளி வீட்டின் கண்ணாடி உடைப்பு நண்பர் கைது
ஓமலூர் அருகே வீட்டின் அருகில் இருந்து மது குடித்ததை தட்டிக்கேட்ட தொழிலாளி வீட்டின் கண்ணாடியை உடைத்ததாக எல்லை பாதுகாப்பு படை வீரரும், அவருடைய நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி காலனியைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது 29). எல்லை பாதுகாப்பு படை வீரர். சூரியபிரகாஷ் பஞ்சாபில் பணியாற்றி வருகிறார். தற்போது 2 மாத விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சூரியபிரகாஷ் மற்றும் அவருடைய நண்பர் விஜி (24) ஆகிய 2 பேரும் முள்ளுச்செட்டிப்பட்டி பகுதியில் உள்ள தொழிலாளி துரைசாமி (65) என்பவர் வீட்டின் அருகில் இருந்து மது குடித்துக்கொண்டிருந்தனர். இதை துரைசாமி தட்டிக்கேட்டார். வீட்டின் அருகில் இருந்து மது குடிக்க வேண்டாம், என்றார். அப்போது சூரியபிரகாசும், விஜியும் சேர்ந்து துரைசாமி வீட்டின் மீது கல் வீசி தாக்கினர். இதில் துரைசாமியின் வீட்டு கண்ணாடி உடைந்து சேதம் ஆனது.
கைது
பின்னர் 2 பேரும் அங்கிருந்து புறப்பட்டு முள்ளுச்செட்டிப்பட்டி ஏரியை அடுத்த ஆலமரம் அருகில் ரோட்டில் நின்று மது குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஞானவேல் என்பவர் டிராக்டர் ஓட்டி வந்தார். சூரியபிரகாசையும், விஜியையும் பார்த்து ஞானவேல், இப்படி ரோட்டில் நின்று மது குடிக்கிறீர்களே என்று கூறி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஞானவேல் டிராக்டர் மீது கல்வீசி தாக்கினர்.
இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசில் துரைசாமி, ஞானவேல் ஆகியோர் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியபிரகாஷ், விஜி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.