அடிக்கடி காய்க்கும் புதிய மாமரம்

இது மாம்பழ சீசன். கோடை காலத்தில் மட்டுமே மாம்பழங்கள் அதிக எண்ணிக்கையில் காய்த்து குலுங்கும்.

Update: 2018-05-20 07:35 GMT
து மாம்பழ சீசன். கோடை காலத்தில் மட்டுமே மாம்பழங்கள் அதிக எண்ணிக்கையில் காய்த்து குலுங்கும். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்த ஸ்ரீ கிஷன் சுமன் வளர்க்கும் மாமரங்கள் ஆண்டுக்கு மூன்று முறை விளைச்சல் கொடுத்து ஆச்சரியப்படுத்துகின்றன. அந்த மாம்பழ ரகத்தின் பெயர் ‘சதாபஹார்’. இந்த வித்தியாசமான மாமர இனத்தை உருவாக்கியதும் ஸ்ரீகிஷன்தான்.

தோட்டக்கலை நிபுணரும், விவசாயியுமான ஸ்ரீகிஷன் மாற்று முறை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். 1995-ம் ஆண்டு ஒரே செடியில் ஏழு நிறங்களில் ரோஜாக்களை பூக்க வைத்து ஆச்சரியப்படுத்தினார். அது நல்ல லாபத்தை கொடுக்கவே அதே பாணியில் மாமரத்திலும் மேம்பட்ட விளைச்சலை உருவாக்க எண்ணினார். பல ரக மாம்பழங்களை பரிசோதித்து புதிய ரகத்தை உருவாக்கியுள்ளார். இது ஜனவரி - பிப்ரவரி, ஜூன் - ஜூலை மற்றும் செப்டம்பர்- அக்டோபர் ஆகிய மூன்று பருவங்களிலும் பூக்கும் தன்மை கொண்டது. மேலும் இந்த புதியவகை மரமானது பரம்பரை நோய்களை தானாகவே கட்டு படுத்தி விடும் ஆற்றலும் கொண்டது.

ஸ்ரீ கிஷனின் இந்த புதிய ரக மாமரங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வளர தொடங்கி இருக்கிறது. ஏராளமான மரக்கன்றுகளை விற்பனை செய்துள்ளார். கடந்த ஆண்டு ஸ்ரீ கிஷனின் புதிய ரக மாமர கண்டுபிடிப்புக்காக ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு ஸ்ரீ கிஷன் பிரபல மடைந்துவிட்டார். தற்போது உலகின் பல பகுதிகளில் இருந்தும் இந்தபுதிய வகை மரக்கன்றுகளை வாங்க ஏராளமானோர் அவரை அணுகுகிறார்கள்.

‘‘எனது மாம்பழத்திற்கும், அல்போன்சா ரகத்திற்கும் ஒருசில ஒற்றுமை இருக்கிறது. சிலர் எனது மாம்பழத்துடன் வேறுசில ரகங்களை ஒப்பிட்டு குழப்ப மடைகிறார்கள். என்னுடைய பழமானது கனிந்த பின்பு வெளிப்புறம் ஆரஞ்சு நிறத்திலும், உள்புறம் குங்குமப்பூ நிறத்திலும் காணப்படும். உலக மாம்பழத் தேவையில் இந்தியா 50 சதவீதத்தை ஈடு செய்கிறது. இந்திய மாம்பழங்கள் தரத்திலும் சுவையிலும் முதன்மை வகிக்கின்றன. அதனால் இந்திய மாம் பழங்கள் உலகளவில் பிரபலமாகிவிட்டது. என் மாம்பழத்திற்கும் அத்தகைய வரவேற்பு கிடைக்கும்’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.

மேலும் செய்திகள்