டாஸ்மாக் கடையில் தகராறு செய்த 2 பேர் கைது

டாஸ்மாக் கடையில் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-05-19 23:13 GMT
வேலூர்,

வேலூரை அடுத்த அரியூரை சேர்ந்தவர் கிரி. இவர் சேண்பாக்கத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த 2 பேர் கிரியிடம் பீர் பாட்டில் கேட்டனர். அதற்கான தொகையை அவர்கள் குறைத்து கொடுத்தனர். அப்போது கிரி முழு தொகையை கொடுத்தால் தான் பீர் பாட்டிலை தருவேன் என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும், தகாத வார்த்தைகளால் கிரியை திட்டி, தகராறில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்துச் சென்றனர். இது குறித்து வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் வேலூர் சம்பத்நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 27), சதீஷ் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்