ஓட்டப்பிடாரம் அருகே மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

ஓட்டப்பிடாரம் அருகே மணல் கடத்திய 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-05-19 20:30 GMT
ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே மணல் கடத்திய 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மணல் லாரி 

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் வழியாக லாரிகளில் ஆற்று மணல் கடத்தி செல்லப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமிக்கு நேற்று அதிகாலையில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் புதியம்புத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது புதூர்பாண்டியாபுரத்தில் இருந்து தட்டப்பாறை நோக்கி சென்ற 4 லாரிகளை தடுத்து நிறுத்தினார். அவரை பார்த்ததும், லாரி டிரைவர்கள் லாரிகளை நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டனர்.

4 லாரிகள் பறிமுதல் 

விசாரணையில், அந்த லாரிகளில் ஆற்று மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அந்த 4 லாரிகளையும் புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து புதியம்புத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாதவராஜ் வழக்குப்பதிவு செய்து, 4 லாரிகளையும் பறிமுதல் செய்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய லாரி உரிமையாளர்கள், டிரைவர்களை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்