பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதே முதல் கடமை: சேலம் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு
பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதே முதல் கடமை என்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற ஜோர்ஜி ஜார்ஜ் தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ராஜன், சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஜோர்ஜி ஜார்ஜ் சேலம் மாவட்ட சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை சேலம் மாவட்ட புதிய சூப்பிரண்டாக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து ஜோர்ஜி ஜார்ஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். குற்ற வழக்குகளில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கோர்ட்டு மூலம் தண்டனை பெற்று கொடுக்கப்படும். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவில் முடிக்கப்படும்.
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு கொடுப்பதே முதல் கடமையாகும். லாட்டரி சீட்டு மற்றும் சந்துக்கடை மூலம் மதுவிற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய செயல்களுக்கு துணை போகும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட குற்றப்பிரிவில் தேங்கி கிடக்கும் வழக்குகளும் விரைந்து முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து கூறினர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோர்ஜி ஜார்ஜ் ஏற்கனவே சேலம் மாநகரில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.