தொழிற்சாலைகளில் விபத்து இல்லாத நிலை எய்திட பாதுகாப்பு மிக அவசியம் - கே.காளியண்ணன்
தொழிற்சாலைகளில் விபத்து இல்லாத நிலை எய்திட பாதுகாப்பு மிக அவசியம் என கே.காளியண்ணன் தெரிவித்தார்.
திருச்சி,
ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளில் விபத்து இல்லாத நிலை எய்திட பாதுகாப்பு மிக அவசியம் என்று தமிழக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் கே.காளியண்ணன் தெரிவித்தார்.
தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் குறித்த ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி திருச்சி பி.எல்.ஏ. கிருஷ்ணா இன் ஓட்டலில் நேற்று நடந்தது. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார திருச்சி இணை இயக்குனர் ஏ.ரவி வரவேற்று பேசினார். திருச்சி உதவி பொதுமேலாளர்(பி.எச்.இ.எல்) டி.பாஸ்கரன், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எப்படியெல்லாம் பயிற்சி பட்டறை நடத்துவது என்பதை எடுத்துரைத்து வாழ்த்தி பேசினார்.
திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் பி.துரைராஜ் தலைமை தாங்கி பேசினார். தமிழக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் கே.காளியண்ணன் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து, ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு கையேட்டினையும் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
கடந்த ஆண்டில் தொழிற்சாலைகளில் 165 மரண விபத்துகள் நடந்துள்ளன. இறந்தவர்களில் 75 பேர் ஒப்பந்த தொழிலாளர்களும், தற்காலிக தொழிலாளர்களும்தான். எஞ்சியவர்கள் நிரந்தர பணியாளர்கள். மேலும் ஆலைகளில் மின்சார வினியோகித்தலில் சரியான புரிதல் இன்றியும் விபத்துகள் ஏற்படுகிறது. திருச்சி மண்டலத்தில் மட்டும் 5,349 தொழிற்சாலைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் பதிவு பெற்ற தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 244. தொழிற்சாலைகளில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஆலைகளில் பணியாற்றுபவர்களில் 30 முதல் 40 சதவீதம் ஒப்பந்த தொழிலாளர்கள்தான்.
தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் தனிநபர் காரணம் அல்ல. அங்கு பணிபுரியும் அனைவருமே அதற்கு பொறுப்பு. எனவே, பயிற்சி பட்டறை மூலம் தொழிற்சாலைகளில் விபத்து இல்லாத நிலையை எய்திட முடியும். அதற்கு பாதுகாப்பும், விழிப்புணர்வும் மிக அவசியம். எனவே, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும். தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து அமலாக்கம் செய்வதில் தமிழ்நாடு முதன்மையாக விளங்குகிறது. தமிழ்நாட்டிலேயே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்துவது இதுதான் முதன் முறை. இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் பி.துரைராஜ் பேசுகையில்,“இன்றைய காலக்கட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்சாலைகளே கிடையாது. நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான வேலை செய்பவர்கள். எந்த தொழிலிலும் நேர்த்தியாகவும், நிதானமாகவும் பணி செய்திட பயிற்சி மிக அவசியம். திருச்சி மண்டலத்தில் பல்வேறு வகையான தொழில் நடந்து வருகிறது. அதிக எண்ணிக்கையில் ஒப்பந்த தொழிலாளர்கள்தான் உள்ளனர்” என்றார்.
முடிவில் ரபீக் அலி நன்றி கூறினார். பயிற்சி வகுப்பில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்கள் பூங்குழலி(திண்டுக்கல்), ராஜசேகர்(கடலூர்), சித்தார்த்தன்(தஞ்சாவூர்), சதர்ன் ரெயில்வே துணை மெக்கானிக்கல் என்ஜினீயர் சிவராமன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார திருச்சி துணை இயக்குனர் மாலதி மற்றும் உதவி இயக்குனர்கள், சான்றிடும் மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விபத்து தடுப்பின் கோட்பாடு, பணியில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு, சுய பாதுகாப்பு சாதனங்கள், பொருட்களை கையாள்வதில் பாதுகாப்பு, தொழில்முறை ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சுகாதார இயக்க அலுவலர்கள், தேசிய பாதுகாப்பு குழும திருச்சி துணைக்குழு உறுப்பினர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, திண்டுக்கல், தேனி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் 350-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர்.