திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் கிளை சார்பில் குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.;
திருப்பூர்,
ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாநகர செயலாளர் முருகேஷ் தலைமை தாங்கினார். வேலம்பாளையம் செயலாளர் சுப்பிரமணியம், தெற்கு மாநகர செயலாளர் ஜெயபாலன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை கண்டித்தும், நாடு முழுவதும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.