காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக தான் பாஜக செயல்பட்டுள்ளது தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதமாக பேட்டி அளித்துள்ளார். #CauveryIssue #TamilisaiSoundararajan #BJP
சென்னை,
காவிரி விவகாரத்தில் பாஜக தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவா் தமிழிசை சவுந்தராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் இறுதி தீா்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது, மேலும் உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து தமிழிசை சுவுந்தரராஜன் கூறியதாவது,
“காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக தான் பாஜக செயல்பட்டுள்ளது” என்றும், மேலும்,“ காவிரி விவகாரத்தை கிடப்பில் போரட்ட காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு எவ்வளவோ விமர்சனம் செய்தார்கள்” என்பதையும் சுட்டிக்காட்டினாா். இதையடுத்து “ கர்நாடகாவில் பாஜக வந்தால் நியாயமான தீர்வும்,நீர் பங்கீடும் தமிழகத்திற்கு கிடைக்கும்”.
இந்நிலையில் கடைசியில் “பாஜகா தான் காவிரி நீரை பெற்று தந்துள்ளது” என்பதை மிகுந்த பெருமிதத்துடன் கூறினார். இவ்வாறு அவா் பேசினார்.