கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எச்.ராஜா பேட்டி
கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என மானாமதுரையில் எச்.ராஜா பேட்டி அளித்தார்.
மானாமதுரை,
மானாமதுரையில் தேவேந்திர மக்கள் அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்கி முகாமை தொடங்கிவைத்தார். முகாமில் எச்.ராஜா பேசும்போது, கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி கர்நாடகாவில் 135 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்கும். நாளை நீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை குறித்த வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பிக்க உள்ளது. இதன் மூலம் 50 ஆண்டு கால திராவிட ஆட்சியால் செய்யப்பட்ட துரோகத்திற்கு தீர்வு காணப்பட உள்ளது என்றார். பின்னர் நடைபெற்ற முகாமில் 200–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தேவேந்திர மக்கள் அறக்கட்டளை நிறுவனர் சிவசங்கரி பரமசிவம், சட்ட ஆலோசகர் சிவகாமி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கவுதம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.