கர்நாடகத்தில் கரை சேர போவது யார்?
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுமா? என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் கர்நாடக மக்களின் எதிர்பார்ப்பு வேறு.;
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது தான் அவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தேர்தல் யுத்தம் நடைபெறும் கர்நாடகத்தில் வருகிற சனிக்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது. செவ்வாய்க்கிழமை அரியணையில் அமரப்போவது யார்? என்று தெரிந்து விடும்.
இந்தியாவில் தற்போது கர்நாடகம், பஞ்சாப், மிசோரம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் தான் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதில் கர்நாடகா மட்டுமே பெரிய மாநிலம். இதனால் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரசும், வெற்றி கனியை பறித்து விட்டால் காங்கிரஸ் இல்லா தேசம் என்ற இலக்கை நெருங்கி விடலாம் என்று பா.ஜனதாவும் தேர்தல் களத்தில் மல்லுக்கட்டுகின்றன.
அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு, இந்த சட்டசபை தேர்தல் முடிவு முன்னோட்டமாக அமையும் என்பதையும் இரு கட்சிகள் மனதில் வைத்துள்ளன.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா இரு கட்சிகளும் அறுதிபெரும்பான்மையை பெற வாய்ப்பு இல்லை என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால் தொங்கு சட்டசபைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு நிகழ்ந்தால் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்க பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும் முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போதைய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு பெரிதாக அதிருப்தி அலை இல்லை. அதேபோல பா.ஜனதா மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் செல்வாக்கு இல்லை. இவை தான், தொங்கு சட்டசபை அமையும் என்பதற்கு முக்கிய காரணமாக அமைந்து விடலாம்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் ஆட்சி அமைக்க யார் முன்வந்தாலும் 113 இடங்கள் தேவை. 150 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைப்போம் என்று பா.ஜனதா கூறி வருகிறது. அரசின் நல திட்டங்களால் தங்களுக்கே ஆதரவு அலை வீசுவதாக மார்தட்டும் காங்கிரஸ் மீண்டும் தாங்கள் ஆட்சி அமைக்கப்போவது உறுதி என்று நம்புகிறது. ஆனால் கர்நாடகத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக எந்த ஒரு ஆளும் கட்சியும் மீண்டும் வெற்றி பெற்றதில்லை என்ற வரலாறு உண்டு.
கடந்த முறை (2013) நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜனதா கட்சி மூன்று அணிகளாக உடைந்தது. பா.ஜனதா, பா.ஜனதாவின் தற்போதைய முதல்-மந்திரி வேட்பாளரான எடியூரப்பா தொடங்கிய தனிக்கட்சி மற்றும் ஸ்ரீராம்லுவின் தனிக்கட்சி என மூன்று அணிகளாக செயல்பட்டன.
அந்த தேர்தல் முடிவில் 40 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி பா.ஜனதா படுதோல்வி அடைந்தது. 122 இடங்களை பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
ஆனால் இந்த தடவை நிலைமை வேறு. பா.ஜனதாவின் மேற்கண்ட 3 அணிகளும் ஒரே அணியாக தேர்தல் களம் காண்கிறது. பா.ஜனதா வலுவான கட்சியாக மாறி உள்ளது.
இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிப்பெற்றே தீர வேண்டும் என்று துடிக்கும் பா.ஜனதா தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து செல்கிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது பிரசாரத்தில், சித்தராமையா மீது தனிப்பட்ட தாக்குதல்களையும் தொடுத்துள்ளார். சித்தராமையா அரசு ‘10 சதவீத கமிஷன் அரசு’ என்று பிரதமர் மோடி பிரசாரங்களில் முழங்கினார். மோடியின் பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் காங்கிரசாரை திகைக்க வைத்துள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் இருப்பதையும், ரூ.35 ஆயிரம் கோடி கனிம முறைகேட்டில் ஈடுபட்ட ரெட்டி சகோதரர்களுடன் கைகோர்த்து செயல்படுவதையும் வாக்காளர்கள் ஏற்க மாட்டார்கள் என்று தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல்காந்தி சாட்டையை சுழற்றினார். பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி அவர் சைக்கிளிலும், மாட்டு வண்டியிலும் சென்று பிரசாரம் செய்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் கூட இப்படி மோதிக்கொள்வார்களோ இல்லையோ, கர்நாடக சட்டசபை தேர்தலில் மோடியும், ராகுல்காந்தியும் அள்ளி வீசிய வார்த்தை கணைகள் வாக்காளர்களை விறுவிறுப்பாக்கி விட்டது.
இரண்டு ஆண்டுகளாக எந்த தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்காத சோனியா காந்தியும் தன் பங்குக்கு கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஒரு காட்டு காட்டி இருக்கிறார். அவர், ‘கவர்ச்சிகரமாக பேசுவதால் ஏழைகளின் வயிறு நிரம்பாது’ என்று பா.ஜனதாவையும், மோடியையும் சாடினார்.
இருபெரும் தேசிய கட்சிகளும் கர்நாடகா என்ற கனியை சுவைக்க கடுமையான கோதாவில் குதித்துள்ளன. இதனால் அங்கே தமிழகத்தை போல இலவச அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் போட்டிப் போட்டு அறிவித்திருக்கின்றன. தமிழகத்தை மிஞ்சிய பணப்பட்டுவாடாவும் நடக்கிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அக்கட்சி நாடு முழுவதும் பீனிக்ஸ் பறவையாக எழ வாய்ப்பு உண்டு.
கடந்த தடவைக்கு முந்தைய கர்நாடக சட்டசபை தேர்தலில் (2008) ஆட்சியை கைப்பற்றி தென்னிந்தியாவில் தனது நுழைவு வாயிலை திறந்த பா.ஜனதா, அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் (2013) ஊழல், உட்கட்சி பூசலால் வீழ்ந்து போனது. கர்நாடகத்தை மையமாக வைத்து கொண்டு மற்ற தென்னிந்திய மாநிலங்களில் தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க போட்ட திட்டம் கானல் நீராக கலைந்து போனது. இந்த தடவை கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றால் பா.ஜனதா மீண்டும் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிடும்.
கடைசி நிமிடத்தில் கர்நாடக மக்களின் மனதை மயக்கி கரை சேர போவது யாரோ...?
-மயிலை அமிர்தசெல்வி