வாலிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு பகுதியில் வாலிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகேயுள்ள கொத்தியம்பாக்கத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் வினோத் (வயது 21). இவர் நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சின்னா மற்றும் அவரது நண்பர்கள் ஹானஸ்ட், சுரேஷ் என்கிற பாலா, முருகேசன், மோசை, குமார் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு வினோத்தை தகாத வார்த்தையால் பேசி, கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கியுள்ளனர்.
இது குறித்து வினோத்தின் தாயார் சாரதா வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் மேற்கண்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.