20 பேருக்கு முதியோர்உதவித்தொகைக்கான ஆணை கலெக்டர் தண்டபாணி வழங்கினார்
சிதம்பரத்தில் நடந்த ஜமாபந்தியில் 20 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை கலெக்டர் தண்டபாணி வழங்கினார்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி 10 தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று 5-வது நாளாக ஜமாபந்தி நடந்தது. ஜமாபந்திக்கு மாவட்ட கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 209 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 33 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு 20 பேருக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 10 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவையும், 2 பேருக்கு சிறு விவசாயிக்கான சான்றிதழையும், ஒருவருக்கு குடி பெயர்ந்தோருக்கான சான்றிதழையும் கலெக்டர் தண்டபாணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.