அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று தொடங்கியது.

Update: 2018-05-09 22:30 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று தொடங்கியது

2018-2019-ம் ஆண்டிற்கான இளங்கலை பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், பி.எஸ்சி. கணிதம், விலங்கியல், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவர வியல் உள்ளிட்ட பாடங் களுக்கான மாணவ-மாணவிகளின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன. எஸ்.சி., எஸ்.டி. மாணவ-மாணவிகள் தங்களது சாதி சான்றிதழை காட்டி விண்ணப்பங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். மற்ற பிரிவினர்கள் ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி 29-ந்தேதி விண்ணப்பங்களை கல்லூரி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

மேலும் செய்திகள்