நண்பரை வழியனுப்ப சென்ற கூலித்தொழிலாளி பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

ராமநாதபுரத்தில் நண்பனை வழியனுப்ப சென்ற கூலித்தொழிலாளி பஸ்சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2018-05-09 21:30 GMT
ராமநாதபுரம்,

பரமக்குடி அருகே உள்ள திருவரங்கம் பகுதியை சேர்ந்த சண்முகவேலு என்பவருடைய மகன் முருகானந்தம் (வயது24). இவர் தனது நண்பரான சத்திரக்குடி சமத்துவபுரம் வேலுச்சாமி மகன் ராஜேஷ்கண்ணன் (21) என்பவருடன் ராமநாதபுரம் ரெயில் நிலையத்திற்கு மற்றொரு நண்பரை வழியனுப்ப மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

கூலித்தொழிலாளிகளான இவர்கள் இருவரும் ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகில் வந்தபோது முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சில் அடிபட்டு கீழே விழுந்தனர். இதில் முருகானந்தம் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். ராஜேஷ்கண்ணன் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் இளையான்குடி மாணிக்கவாசகர் நகர் நாகராஜன் மகன் மோகன்(32) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்