அக்னி நட்சத்திரம் தொடங்கியபிறகு மதுரையில் இடி-மின்னலுடன் தொடர் மழை
அக்னி நட்சத்திரம் தொடங்கியபிறகு மதுரை மாவட்டத்தில் இடி-மின்னலுடன் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக சிட்டம்பட்டியில் 101 மில்லிமீட்டர் பதிவானது.
மதுரை,
அக்னிநட்சத்திரம் எனும் கத்தரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. வருகிற 28-ந்தேதி முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் கடுமையான வெயில்இருக்கும் ஆனால் மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் அக்னிநட்சத்திரம் தொடங்கிய நாள்முதல் பரவலாக ஆங்காங்கே மழைபெய்து வருகிறது. தினமும் ஏதேனும் சில பகுதிகளில் மழை பெய்கிறது. தொடர்மழை காரணமாக வெயிலின் வெப்பம் சற்று தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.
நேற்று முன்தினம் பகலில் வெயில் அடித்தது. மாலையில் மதுரை மாநகர் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலும் இடி- மின்னலுடன் மழைபெய்யத் தொடங்கியது. இரவிலும் பலத்த மழை கொட்டியது. நேற்றும் மதுரையில் பகலில் வெயில் அடித்த நிலையில் மாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையின்போது இடிச்சத்தம் அதிகமாக கேட்டுக்கொண்டே இருந்தது. தல்லாகுளம் பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேல் மழை கொட்டியது. அப்போது, கோகலே ரோட்டில் ஒரு மரமும், தொலைபேசிக்கம்பமும் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிட்டம்பட்டியில் 101 மில்லிமீட்டர் மழை பதிவானது.
மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
சாத்தியாறு-86, இடையபட்டி-85.2, மேட்டுப்பட்டி-65, கள்ளந்திரி- 57, மேலூர்-49, விரகனூர்-38, தணியாமங்கலம்-35, மதுரை-23, ஆண்டிப்பட்டி-15.2, வீரபாண்டி-8, உத்தமபாளையம்-3.2. சண்முகாநதி-3.