காவிரி பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் வைகோ பேட்டி
காவிரி பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று வைகோ கூறினார்.
நன்னிலம்,
மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தை பாழாக்கும் நோக்கத்தோடு துரோகம் செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் காவிரி இயக்கத்தின் சார்பில் பிரசாரம் மேற்கொண்டபோது நான் எதை கூறி எச்சரிக்கை செய்தேனோ அது இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.
இரண்டு ஆபத்துக்களில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். ஒன்று, கர்நாடகத்தில் 2 அணைகள் கட்ட திட்டமிட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். மற்றொன்று, காவிரி ஆற்று படுகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கியாஸ் எடுக்கும் திட்டம். இந்த இரண்டு ஆபத்துகளில் இருந்து நாம் காப்பாற்றப்பட வேண்டும்.
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு வந்தாலும், காங்கிரஸ் அரசு வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அணை கட்ட முடியாது. இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வந்தபோது தமிழக அரசு வக்கீல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் காவிரியில் தண்ணீர் வருமா? என்று வாட்டாள் நாகராஜ் போன்று பேசுகிறார். எனவே நாம் அனை வரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.