நாகர்கோவிலில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் சாலை மறியல் 263 பேர் கைது
ஊதிய உயர்வு உள்பட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் நாகர்கோவிலில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி 263 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவேண்டும், தொழிலாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்வதை கைவிடவேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை தொழிலாளர்களுக்கு உடனே திருப்பி வழங்கவேண்டும், மழைகாலங்களில் வேலையில்லாமல் தவிக்கும் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கவேண்டும், தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்பட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் அனைத்து சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு ரப்பர் கழக தொழிலாளர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட பொதுச்செயலாளர் வல்சகுமார், தொ.மு.ச. மாவட்ட பொதுச்செயலாளர் விஜயன், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் குமரன், அனந்தகிருஷ்ணன், பி.எம்.எஸ். நிர்வாகி ராஜேந்திரன், ஜனதாதள நிர்வாகி ஞானதாஸ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., தி.மு.க.நகர செயலாளர் மகேஷ், முன்னாள் எம்.பி. பெல்லார்மின் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக பெண்கள் உள்பட 263 பேரை கைதுசெய்தனர். அவர்கள் அனைவரும் போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு ராமன்புதூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். மாலையில், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.