சுருட்டப்பள்ளி தடுப்பணை வறண்டது
சுருட்டப்பள்ளி தடுப்பணை வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடும் தண்ணீர் ராமகிரி, நாகலாபுரம், நந்தனம், சுப்பாநாயுடுகண்டிகை, அச்சமநாயுடுகண்டிகை, காரணி, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. இப்படி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து நிலத்தடி நீர்மட்டம் உயர, விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆங்கிலேயர்கள் 1937-ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டப்பள்ளியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினர்.
இதில் 10 அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். 5 அடி தண்ணீர் எப்போதும் இருப்பு இருக்கும். இதனால் ஆரணி ஆற்றங்கரையில் உள்ள நுற்றுக்கணக்கான விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
அதே போல் சுருட்டப்பள்ளி, காரணி, நந்திமங்கலம், காசிரெட்டிபேட்டை, அனுமந்தாபுரம், அச்சமாநாயுடுகண்டிகை, சுப்பாநாயுடுகண்டிகை உள்பட 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தத்தம் கிராமங்களில் உள்ள நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீரை கொண்டு சென்று குழாய்களில் குடிநீர் வினியோகித்து வருகின்றன. மேலும் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக் கான கால்நடைகள் தடுப்பணையில் தண்ணீர் குடித்து செல்வது வழக்கம். ஏராளமான மீனவர்கள் தடுப்பணையில் மீன் பிடித்து வாழ்கை நடத்தி வந்தனர். கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பலத்த மழை பெய்ததால் தடுப்பணை நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்ததால் தடுப்பணையில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வந்தது. கோடை வெயில் காரணமாக தடுப்பணை முழுவதுமாக வறண்டது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். அதே போல் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.