இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி, தொழில் மைய மேலாளர் தகவல்
புதிதாக தொழில் தொடங்கும் முதல் தலைமுறை இளைஞர்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
சிவகங்கை,
மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தினை அரசு அறிவித்து மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை திட்ட மதிப்பில் வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தமிழக அரசின் மானியமாக 25 சதவீதத்துடன் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் பெறலாம். மேலும் வட்டி மானியமாக வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீத வட்டி மானியமாகவும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின்கீழ் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், காரைக்குடியில் செயல்படும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி, தொழில் முதலீட்டு கழகம் மற்றும் பாண்டியன் கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தில் வங்கிகளில் கடனுதவி பெறவும், மின் இணைப்பு மற்றும் பல்வேறு உரிமங்கள் விரைவில் கிடைத்திடவும் வழிவகை செய்யப்படும். பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடும், ஆதிதிராவிடர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. முதலில் வரும் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி கடனுதவி வழங்கப்படும். இத்திட்டம் குறித்த சிறப்பு வழிகாட்டுதல் கூட்டம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். அவர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஏற்கனவே மத்திய-மாநில அரசின் திட்டங்களில் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் இந்த திட்டத்தின்கீழ் கடனுதவி பெற இயலாது. விவசாயம், வாகனம், மாசினை ஏற்படுத்தும் தொழில்கள் போன்ற ஒருசில தொழில்கள் தவிர்த்து, உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.