கோத்தகிரியில் அளக்கரை கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவு
கோத்தகிரியில் அளக்கரை கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவு அடைந்து உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி நகரில் பெருகி வரும் மக்கள்தொகை காரணமாகவும், நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணை கோடை காலங்களில் வறண்டு விடுவதாலும் கோத்தகிரி பகுதியில் ஆண்டு தோறும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் வறட்சி நிவாரண திட்ட நிதியின் கீழ் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 லட்சம் செலவில் கோத்தகிரி நகரின் 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் 2 முறை தலா ரூ.40 லட்சம் செலவில் ஈளாடா தடுப்பணை தூர்வாரப்பட்டதுடன், பக்கவாட்டு சுவர்களும் கட்டி முடிக்கப்பட்டன. இதன்காரணமாக ஈளாடா தடுப்பணையில் தற்போது இருமடங்கு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
கோத்தகிரி நகர் பகுதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களின் தண்ணீர் தேவையை முற்றிலுமாக பூர்த்தி செய்ய அளக்கரை கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டு வரப்பட்டது. இதற்காக ரூ.10 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டத்திற்கான கடன் தொகையை கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் தவணைகளாக திருப்பி செலுத்த வேண்டியிருந்த நிலையில், அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா முழு தொகையையும் மானியமாக அறிவித்ததுடன், முழு தொகையையும் தமிழக அரசே ஏற்று கொள்வதாக அறிவித்தார். இத்திட்டத்திற்காக அளக்கரை பகுதியில் செல்லும் ஓடையை தடுத்து தரைமட்ட பிரமாண்ட நீர்தேக்க தொட்டி அமைத்து அங்கிருந்து கோத்தகிரி வரை பெரிய இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டதுடன் தாழ்வான இடங்களில் இருந்து தண்ணீரை உந்துவதற்காக 7 இடங்களில் நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் மோட்டார் அறைகள் அமைக்கப்பட்டன.
மேலும் நகரின் உயரமான சக்திமலை பகுதியில் 2 மெகா நீர்தேக்க தொட்டிகள், ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நீர்தேக்க தொட்டி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பணி மிகவும் தாமதமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு, தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்ததுடன் விரைவில் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
அளக்கரை கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவு அடைந்து உள்ளது. 2-வது சுத்திகரிப்பு நிலைய நீர்தேக்க தொட்டி கட்டும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள முதலாவது சுத்திகரிப்பு நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நேரு பூங்கா அருகில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான நீர்உந்து நிலையத்திற்கு குழாய்களை இணைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் முற்றிலுமாக நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மேலும் சில மாதங்கள் ஆகும். இருப்பினும் இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு அளக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீரை வினியோகம் செய்ய வெள்ளோட்டம் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.