3-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் 2¼ கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைப்பு
மும்பையில் அமையும் 3-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் இதுவரை 2¼ கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் அமையும் 3-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் இதுவரை 2¼ கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரெயில் வழித்தடம்
மும்பையில் பெருகி வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு மோனோ, மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் 3-வது மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடம் கொலபா-பாந்திராசீப்ஸ் வரை 33.5 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடம் சுரங்கமார்க்கமாக அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 27 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதில் 1 மெட்ரோ ரெயில் நிலையத்தை தவிர மற்ற 26 ரெயில் நிலையங்களும் பூமிக்கடியில் அமைய உள்ளன. இந்த திட்டத்திற்கான பணிகள் கடந்த ஆண்டு முதல் தொடங்கி நடந்து வருகிறது.
2¼ கி.மீ. தூரம்
இதில், ஆசாத் மைதான், நயாநகர், மரோல் நாக்கா, வித்யாநகரி ஆகிய நான்கு இடங்களில் இருந்து சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 8 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுவரையில், ஆசாத் மைதானத்தில் 450 மீட்டர், நயாநகரில் 1,005 மீட்டர், மரோல் நாக்காவில் 395 மீட்டர், வித்யாநகரியில் 342 மீட்டர் தூரத்துக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 192 மீட்டர் தூரத்துக்கு (2¼ கி.மீ. தூரத்துக்கு சற்று குறைவு) சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளதாக மும்பை மெட்ரோ ரெயில் கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.