தொண்டையில் முட்டை சிக்கி தொழிலாளி பரிதாப சாவு

சாப்பிடும்போது தொண்டையில் முட்டை சிக்கியதால் தொழிலாளி பரிதாபமாக செத்தார்.;

Update: 2018-05-08 22:24 GMT
புதுச்சேரி,

புதுவை கொம்பாக்கம் குப்பம்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 41). தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து மனைவி புனிதாவிடம் சாப்பாடு கேட்டார். அவரும் முட்டையுடன் உணவு வழங்கினார்.

முட்டையை எடுத்த குணசேகரன் அதை முழுவதுமாக வாயில்போட்டு விழுங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த முட்டை தொண்டையில் சிக்கியது.

இதனால் குணசேகரன் மூச்சுவிட முடியாமல் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டார்.

அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் குணசேகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்ட அவரது மனைவி புனிதா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்