விசைத்தறி உரிமையாளர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்செங்கோடு அருகே விசைத்தறி உரிமையாளர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2018-05-08 23:00 GMT
திருச்செங்கோடு,

திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 50). விசைத்தறி உரிமையாளரான இவர் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்த தனபால்(33), ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த கமல் என்ற கமலக்கண்ணன்(39) ஆகியோர் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்செங்கோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் கைதான இருவரும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறி, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்துக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், தனபால், கமல் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு திருச்செங்கோடு கிளை சிறையில் உள்ள அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்