காவிரி பிரச்சினை குறித்து பேசுவதற்காக பிரதமர் மோடி நேரம் ஒதுக்காதது அதிகார மமதையை காட்டுகிறது
காவிரி பிரச்சினை குறித்து பேசுவதற்காக பிரதமர் மோடி நேரம் ஒதுக்காதது அதிகார மமதையை காட்டுகிறது என வைகோ கூறினார்.
திருவிடைமருதூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் முருகன் வரவேற்றார். இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சினை குறித்து பேசுவதற்காக ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரதமரிடம் நேரம் கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுப்பது வேதனையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த செயல் அவரது அதிகார மமதையை காட்டுகிறது. இது மன்னிக்க முடியாத குற்றம். மோடியின் வீரவசனத்தால் மக்களை நீண்ட காலம் ஏமாற்ற முடியாது. பா.ஜனதாவுக்கு செலவு செய்ய கார்ப்பரேட் கம்பெனிகள் தயாராக உள்ளன.
தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை கையில் வைத்து கொண்டு அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை எல்லாம் தி.மு.க.வுக்கு கிடைப்பதை தடுக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இது நடக்காது. நாட்டின் மதசார்பற்ற தன்மையை பா.ஜனதா சிதைக்கிறது. தற்போது ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி 130 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும். அதற்கு கூடுதலான இடங்களை பெறவும் கூடாது. அதற்கான பணிகளை செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கோவி.செழியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் உதயகுமார், ஒன்றிய செயலாளர் பழனி, முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் இளங்கோவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ம.தி.மு.க. நகர செயலா ளர் சரவணன் நன்றி கூறினார்.