மணல் குவாரி தொடங்கியதற்கு எதிர்ப்பு பொதுமக்கள் கையெழுத்து இயக்கம்
கொள்ளிடம் ஆற்றில் புதிய மணல் குவாரி கடந்த 4-ந் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடம் அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர் 4-ந் தேதி பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் புதிய மணல் குவாரி கடந்த 4-ந் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம், அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர் 4-ந் தேதி பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். தொடர்ந்து சாலை மறியல், கண்டன ஊர்வலம், சுடுகாட்டில் குடியேறுதல், ஒப்பாரி வைத்து போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள புதிய மணல் குவாரியை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று ஏலாக்குறிச்சியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், கையெழுத்து பெறப்பட்ட படிவங்கள் தமிழக கவர்னர், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர். இந்த கையெழுத்து இயக்கத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் (கிழக்கு) கென்னடி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தனபால், அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் முருகானந்தம், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வடிவேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மற்றும் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கையெழுத்து போட்டு சென்றனர்.