ரெயில்வே பள்ளியை மூடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரையில் உள்ள ரெயில்வே பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.ஐ.டி.யூ., டி.ஆர்.இ.யூ. மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
மதுரை,
இந்திய ரெயில்வேயில் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளை களைய பிபேக் தேப்ராய் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ரெயில்வேயை தனியார்மயமாக்க பரிந்துரை செய்தது. அதனை தொடந்து நாடு முழுவதும் ரெயில்வே தொடர்பான பணிகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன.
அதனை தொடர்ந்து ரெயில்வே பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், அச்சகங்கள் ஆகியவற்றை மூடுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், ரெயில்வே பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 122 ரெயில்வே பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
தென்னக ரெயில்வேயில் மட்டும் 8 ரெயில்வே பள்ளிகள் உள்ளன. இந்த நிலையில், ரெயில்வே பள்ளிகளை மூடும் தென்னக ரெயில்வே பொது மேலாளரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.ஐ.டி.யூ., டி.ஆர்.இ.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று மதுரை ரெயில்வே பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சி.ஐ.டி.யூ. ஒருங்கிணைப்பாளர் நவுசாத் அலி, டி.ஆர்.இ.யூ. கோட்ட செயலாளர் சங்கரநாராயணன், கூடுதல் பொது செயலாளர் திருமலை அய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது, நாடு முழுவதும் ரெயில்வே பள்ளிகளை மூட உத்தரவிட்டும், எந்த மண்டல பொது மேலாளரும் அதற்கான முயற்சிகளை எடுக்காத போது, தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ரெயில்வே பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளார்.
ஏற்கனவே, தென் கிழக்கு ரெயில்வே, மேற்கு மத்திய ரெயில்வே ஆகியவற்றில் ரெயில்வே பள்ளிகளை மூடுவதற்கு ரெயில்வே ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. கோரக்பூர் ரெயில்வே கோட்டத்தில், ரெயில்வே பள்ளி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தென்கிழக்கு மற்றும் மேற்கு மத்திய ரெயில்வே மண்டலங்களில் உள்ள ரெயில்வே பள்ளிகளும் கேந்திரிய வித்யாலயாவுடன் இணைத்துக்கொள்ள முடிவு செய்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளன. அதேபோல, தென்னக ரெயில்வேயில் உள்ள ரெயில்வே பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக கேந்திரிய வித்யாலயாவுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.