‘நீட்’ தேர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ‘நீட்’ தேர்வை எழுத சென்ற திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் அங்கு இறந்தார். இதேபோல மதுரையில் மாணவி ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார். உயிர் பலி வாங்கிய ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ‘நீட்’ தேர்வால் உயிர் பலி ஏற்பட்டதால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்தில் கூடுதல் மையங்கள் அமைக்கப்படாததை கண்டித்தும் திருச்சியில் ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது கட்சி நிர்வாகிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி இருந்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், நிர்வாகிகள் லெனின், சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.