‘நீட்’ தேர்வு எழுத மகனை அழைத்து சென்றபோது இறந்த நூலகர் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக மகனை எர்ணாகுளத்திற்கு அழைத்துச் சென்றபோது இறந்த திருத்துறைப்பூண்டி நூலகர் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்-பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று (செவ்வாய்க்கிழமை) உடல் அடக்கம் நடக்கிறது.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி மேலத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது 47). இவர் பெருகவாழ்ந்தானில் உள்ள நூலகத்தில் நூலக அலுவலராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பாரதி மகாதேவி(40). இவர் ராயநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு கஸ்தூரி மகாலிங்கம் என்ற மகனும், ஐஸ்வர்யா மகாதேவி என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் குத்துபட்டு பகுதிக்கு கிருஷ்ணசாமி அழைத்துச் சென்றார்.
அங்குள்ள தேர்வு மையத்தில் மகனை விட்டு, விட்டு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வந்துள்ளார். அப்போது விடுதியில் மயங்கி விழுந்த கிருஷ்ணசாமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கிருஷ்ணசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து விளக்குடியில் உள்ள அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனது கணவர் இறந்த தகவல் அறிந்ததும் மகாதேவி கதறி அழுதார். இதையடுத்து அவரது இல்லத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்று மகாதேவிக்கு ஆறுதல் கூறினர்.
இதையடுத்து கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று முன்தினம் மாலையில் புறப்பட்டு நள்ளிரவு 2 மணி அளவில் விளக்குடியில் உள்்ள அவரது இல்லத்திற்கு வந்து சேர்ந்தது. அப்போது உடலை பார்த்து மனைவி பாரதி மகாதேவி, மகள்் ஐஸ்வர்யா மகாதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ், தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி., ஆடலரசன் எம்.எல்.ஏ., த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், மாவட்ட செயலாளர் செல்வத்துரை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஜ.வி.நாகராஜன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, உலகநாதன், சிவபுண்ணியம், தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் வையாபுரி, ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உள்ளிட்டோரும் ஆறுதல் கூறினார்கள்.
கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. ‘நீட்’ தேர்வு என்பது ஓரு உயிர்க்கொல்லி நோய். ஏனென்றால் சென்ற ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி உயிர் இழந்தார். இந்த ஆண்டு கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி உயிர் இழந்துள்ளார். இதேபோல் நமக்கு தெரியாமல் எத்தனையோ பேர் உயிர் இழந்து உள்ளனர்.
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய பல்வேறு போராட்டங்களை தி.மு.க. நடத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வை ரத்த செய்ய முயற்சிகள் மேற்கொள்வோம். மத்திய அரசும், மாநில அரசுகளும் இனியும் தமிழர்களை வஞ்கிக்காமல் ‘நீட்’ தேர்வை ரத்து செய்தால் மட்டுமே உயிர் இழப்புகளை தடுக்க முடியும் என்றார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறும்போது, ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக மகனை கேரளா அழைத்து சென்று அங்கே உயிரிழந்த மாணவனின் தந்தை கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எந்த வகையிலும் பயனளிக்காது. இறந்தவரின் மகனுக்கு கல்வி சம்பந்தப்பட்ட செலவுகள் அனைத்தையும் மற்றும் நிரந்தர வருவாய் பெறும் வகையிலும் அரசு உதவ வேண்டும். தமிழக மாணவர்கள் ‘நீட்’ தேர்வினால் பயன்பெற போவதில்லை. வெளிமாநில மாணவர்கள் மட்டுமே ‘நீட்’ தேர்வினால் பயன்பெறுவார்கள் என்றார்.
கிருஷ்ணசாமியின் மைத்துனர் கம்போடியாவில் குடும்பத்துடன் வசிப்பதால் அவர் இன்று(செவ்வாய்க்கிழமை) ஊருக்கு வருகிறார். அவர் வந்தவுடன் இன்று காலை 10 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெற்று உடல் அடக்கம் நடக்கிறது.