தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க குழு
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், உப்புக்கரைசல் நீரும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா, சாலைவசதி, குடிநீர்வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்து வருகிறார்கள்.
இவ்வாறு மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுதிக்கொடுப்பதற்காக பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மனு கொடுப்பதற்கு முன்னதாக குறைதீர்க்கும் மைய கூட்டத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள மையத்தில் மனுவை கொடுத்து கணினியில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்று பதிவு செய்து பின்னர், குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக வரிசையில் நின்று மனு அளிப்பார்கள்.
முதியவர்கள் மனு அளிக்க வரும் போது அவர்களால் நீண்ட நேரம் நிற்க முடியாது. அவ்வாறு வருபவர்களுக்கு சிரமத்தை தவிர்க்கும் வகையில் இருக்கைகளும், மின் விசிறிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் வெயிலில் அலைந்து களைத்து வருவதால் உடல் சோர்வு ஏற்படுவதை தடுக்கவும், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வல்லம் நடமாடும் மருத்துவகுழுவை சேர்ந்த டாக்டர் பாரதி மற்றும் டெக்னீசியன், உதவியாளர் ஒருவர் என 3 பேர் கொண்ட குழுவினர் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் இருந்து பொதுமக்கள் வெளியே வரும் இடத்தின் அருகே அமர்ந்து சிகிச்சை அளித்தனர். காலை 10 மணி முதல் குறைதீர்க்கும் கூட்டம் முடிவடையும் நேரம் வரை டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். உடல்நலிவுற்ற பொதுமக்கள் டாக்டரிடம் பரிசோதனை செய்து மருந்துகளையும் வாங்கிச்சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்புகசாயமும், உப்புகரைசல் நீரும் வழங்கப்பட்டன.
இது குறித்து மருத்துவகுழுவினர் கூறும்போதும், “வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த நடமாடும் மருத்துவ குழுவினர் ஒருநாளைக்கு ஒரு கிராமத்துக்கு சென்று சிகிச்சை அளிப்பது வழக்கம். தற்போது குறைதீர்க்கும் கூட்டத்தில் வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதையடுத்து நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம். இனி வரும் குறைதீர்க்கும் கூட்டங்களிலும் இது தொடரும்”என்றனர்.