பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.;

Update: 2018-05-07 22:00 GMT
பரமக்குடி,

பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் அதிகாரிகளிடம் தெரிவிக்க வந்து செல்கின்றனர். அவ்வாறு சான்றிதழ்களை பெறுவதற்கும், திருத்தம் செய்வதற்கும் தாலுகா அலுவலகத்தின் கீழ் தளத்தில் உள்ள கம்ப்யூட்டர் அறையில் விண்ணப்பம் செய்து அதற்கான ரசீது கம்ப்யூட்டரில் பதிவு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

அந்த இடத்தில் வாயிலில் நாய்கள் படுத்துக்கிடப்பதால் பொதுமக்கள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர். நாய்கள் படுத்துக்கிடப்பதை கவனிக்காமல் யாராவது சென்றால் திடீரென அந்த நாய்கள் அவர்களை பார்த்து குரைத்து கடிக்கவும் வருகின்றன. இதனால் அந்த கம்ப்யூட்டர் அறைக்கு மக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அங்கு மட்டுமின்றி தாலுகா அலுவலகத்தின் மற்ற பகுதிகளிலும் நாய்கள் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்