சுகாதார வளாகத்தை சீரமைத்து திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
திப்பன்பாளையம் கிராமத்தில் ஆண்கள் சுகாதார வளாகத்தை சீரமைத்து உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த பெரியஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட திப்பன்பாளையம் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் செலவில் அரசு சார்பில் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த வளாகத்தில் தண்ணீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை இந்த சுகாதார வளாகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவில்லை.
அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த கட்டிடம், தற்போது பராமரிப்பு இல்லாததால் திறப்பு விழா காண்பதற்கு முன்பே, அதன் கதவுகள் உடைந்தும், உள்புற அறைகள் சேதம் அடைந்தும் காணப்படுகிறது.
குடியிருப்புகளின் மத்தியில் சுகாதார தேவையை வலியுறுத்தி கட்டப்பட்ட இந்த ஆண்கள் சுகாதார வளாகத்தை சீரமைத்து உடனடியாக திறக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.