500 லாரிகள் திருடிய மாநகராட்சி கவுன்சிலர் கைது
மராட்டியம் முழுவதும் 500 லாரிகள் திருடிய மாநகராட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
அவுரங்காபாத்,
மராட்டியத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் லாரிகள் திருட்டு போகின. இது குறித்து லாரி உரிமையாளர்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக அவுரங்காபாத் மாநகராட்சி கவுன்சிலர் ஜாபர் ஷேக் என்பவரை தானே மாவட்டம் பிவண்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான லாரிகளை திருடி இருப்பது தெரியவந்தது. இவர் தனது சகோதரர் பாபர் ஷேக்குடன் சேர்ந்து லாரிகளை திருடி அதற்கு வர்ணம் பூசி போலி முகவரியில் பதிவு செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் ஏறத்தாழ 500 லாரிகளை திருடி விற்பனை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.