வேலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வை 8,751 மாணவ-மாணவிகள் எழுதினர்
வேலூர் மாவட்டத்தில் நடந்த நீட் தேர்வை 8 ஆயிரத்து 751 மாணவ-மாணவிகள் எழுதினர்.
வேலூர்,
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் 14 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு தேர்வு எழுத வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 54 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
‘நீட்’ தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் காலை 7 மணி முதல் மையங்களுக்கு வருகை தந்தனர். மாணவ-மாணவிகள் கடுமையான சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 7 மணி முதல் 8.30 மணி வரை வந்தவர்கள், 8.30 மணிக்கு மேல் வந்தவர்கள் என இருபிரிவுகளாக மாணவர்கள் சோதனை செய்யப்பட்டனர்.
முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், காதில் ‘டார்ச் லைட்’ அடித்தும் சோதனை செய்தனர். மாணவிகள் கம்மல், செயின், மூக்குத்தி, கால் கொலுசு போன்ற ஆபரணங்கள் அணிய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் செயின், கம்மல், மூக்குத்தியை கழட்டி கொடுத்தனர். மூக்குத்தி, கம்மலை கழட்டியபோது சிலர் வலி தாங்காமல் கதறி அழுதனர். மாணவிகளின் தலைமுடியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மாணவிகள் தலையில் வைத்திருந்த பூ மற்றும் ‘ஹேர்பின்’களை அவர்களே அகற்றும்படி அதிகாரிகள் கூறினார்கள்.
அதேபோல் கைக்கெடிகாரம், தொப்பி, மோதிரம், பெல்ட் போன்றவையும் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. பலத்த சோதனைகளுக்கு பின்னர் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய கடும் சோதனைகளால் மாணவ-மாணவிகள் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். 9.30 மணிக்கு பின்னர் வந்த மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வேலூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 751 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர். 303 பேர் தேர்வு எழுதவில்லை. ஒரு தேர்வு அறையில் 24 பேருக்கு 2 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்வை கண்காணிக்க 21 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு முடிவடையும் வரை மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் தேர்வு மையத்தின் வெளியே காத்திருந்தனர்.
தேர்வு குறித்து மாணவ-மாணவிகள் கூறுகையில், ‘நீட்’ தேர்வு எளிதாக இருந்தது. இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மட்டும் கடினமாக இருந்தது. மற்ற பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தன. தமிழக அரசால் நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களில் அளிக்கப்பட்ட பயிற்சியால் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள முடிந்தது. பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட மாதிரி தேர்வை விட ‘நீட்’ தேர்வு எளிதாக இருந்தது’ என்றனர்.
‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு துணையாக அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். அவர்கள் தேர்வு மையத்தின் வெளியே கொளுத்தும் வெயிலில் அமர்ந்திருந்தனர். வெயிலின் தாக்கம் காரணமாக அவர்கள் அவதிக்கு உள்ளானார்கள்.
தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. போதிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும், சோதனை என்ற பெயரில் மாணவ-மாணவிகளை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டினார்கள்.