தாராவியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: நெல்லையை சேர்ந்தவர்

தாராவியில் நெல்லையை சேர்ந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-05-06 23:15 GMT
மும்பை, 

மும்பை தாராவி பி.வி.சால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் திலிப்குமார்(வயது30). டிரைவர். தாய், தந்தையுடன் வசித்து வந்தார். திலிப்குமார் அண்மைகாலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்ற அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

மகன் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அவரது தாய் அலறித்துடித்தார்.

இந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனடியாக திலிப்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தாராவி போலீசார் திலிப்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

என்ன காரணத்திற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட திலிப்குமாரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ஆகும்.

மேலும் செய்திகள்