பெருந்துறை அருகே பொக்லைன் எந்திரம் மூலம் கிளை வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

பெருந்துறை அருகே கிளை வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தார்கள்.

Update: 2018-05-06 23:15 GMT
பெருந்துறை,

ஈரோட்டில் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் ஒருவர் பெருந்துறை அருகே பூவம்பாளையம் கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி பராமரித்து வருகிறார்.

இவரது தோட்டத்திற்கு நடுவே கீழ்பவானி வாய்க்காலின் நேரடி மதகு பிரிந்து செல்கிறது. இந்த கிளை வாய்க்கால் மூலம் 250 ஏக்கர் பரப்பளவில் பாசனம் பெற்று வருகிறது. வாய்க்கால் 13 அடி அகலம் கொண்டது ஆகும்.

இந்தநிலையில் கிளை வாய்க்காலின் நடுவே டாக்டரின் தோட்டத்தை கடந்து செல்லும் தூரம் வரை சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ஒரு அடி சிமெண்டு குழாய் அமைத்து அவர் வாய்க்காலை மூடிவிட்டார். நேற்று முன்தினம் கிளைவாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது குழாய் நிரம்பி தண்ணீர் வெளியேறியது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் கிளை வாய்க்காலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த குழாய் கள் இடித்து அகற்றப்பட்டது.

இதனால் அங்கு சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்