மின்சாரம் தாக்கி பலியான 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
மின்சாரம் தாக்கி பலியான 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
சென்னை,
கோவை மாவட்டம், பசூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி பார்வதி, அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் மகன் மணிகண்டன், மின்கம்பத்தை பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கரைசுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டுகுமார் என்பவரின் மகன் செல்வன் வருண் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், உதகை மேல்கோடப்பமந்து இடத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் பாபு, கொடிகம்பத்தை தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், மேலநீலித நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னு பாண்டி என்பவரின் மனைவி மாடத்தியம்மாள் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், நாஞ்சான்குளம் கிராமத்தைச் சேர்ந்த யோவான் என்பவரின் மகன் தேவராஜ், தெருவிளக்கை மாட்டிக்கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இனுங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரின் மகன் சரவணன், தெருவிளக்கை மாற்ற முற்படும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சென்னை, கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி மஞ்சுளா, மின்மோட்டாரை இயக்கியபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், துப்புகானப்பள்ளி தரப்புகனஜுர் கிராமத்தைச் சேர்ந்த லோகப்பா என்பவரின் மகன் பெரியராமப்பா, தோட்டத்தில் புல் அறுத்துக்கொண்டிருந்தபோது, மின்சார கம்பியை தவறுதலாக தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சென்னை, தண்டையார்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. குப்பத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் விமல் குமார், மோட்டார் சுவிட்சை போட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் லட்சுமணன், மின்கம்பத்தை பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி இந்த 11 பேர் பலியான செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 11 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.